Friday, July 16, 2010

கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லாரியின் அதிபர் அ.அகிலதாஸ் தலைமையில் பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் முதல் நாள் நிகழ்வகள் இடம் பெறவுள்ளன.




காலை அமர்வுகள் செல்லையா அரங்கில் இடம் பெறவுள்ளது இந் நிகழ்வுpல் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பண்பாட்டு ஆலுவலகள் மற்றும் விளையாட்டுத்துறையின் செயலாளர் எல. இளங்கோவும் சிறப்பு விருந்தினாகளாகயாழ்ப்பாணம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில்நந்தனன்கொக்குவில் இந்துக் கல்லூரி முன்னாள் பிரதி அதிபர் திருமதி சுகிர்த லட்சுமி சுப்பிரமணியமும் கலந்து கொள்ளவுள்ளாhகள்.



ஆசியுரையை நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகஞானசம்பந்த பரமாச்சாரியசுவாமிகளும் வரவேற்புரையைகொக்குவில் இந்துக் கல்லூரி பிரதி அதிபர் க.வேலாயுதமும் வழங்கவுள்ளாhகள்



நினைவுரையை திருமதி சுகிர்தலட்சுமி சுப்பிரமணியம் நிகழ்த்தவுள்ளார்.



பிரதமஅதிதி உரையைத் தொடாந்து நூற்றாண்டு மலரினை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக முகாமைத்துவ வணிகபீடாதிபதி க.தேவராசா வெளியிட்டு வைக்க முதற்பிரதியை சமூகப் புரவலர் மாணிக்கம் சுப்பிரமணியம் பெற்றுக் கொள்வார்



நூற்றாண்டு மலர் மதிப்புரையை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக சரேஸ்ட விரிவுரையாளர் திருநாவுக்கரசு வேல்நம்பி நிகழ்த்தவுள்ளார்.



மாலை நிகழ்வகள் பிற்பகல் 5.00 மணிக்கு கார்த்திகேசு அரங்கில் கல்லூரியின் மன்னாள் பிரதி அதிபர் திருமதி சுகிர்தலட்சுமி சுப்பிரமணியம் தலைமையில் இடம் பெறவுள்ளது இந் நிகழ்வுpல் பிரதம அதிதியாக பிரபல வர்த்தகரும் பழைய மாணவனுமான க.வை சற்குணமும் சிறப்பு அதிதிகளாக கனடா பழைய மாணவர் சங்கப் பொருளாளர் எஸ்.குகனேந்திரன் கொழும்பு பழைய மாணவர் சங்க செயலாளரும் முன்னாள் பிரதி அதிபருமான ப.ஜெகநாதன்முன்னாள் ஆசிரியர் சூ.பாலயோகன்பழைய மாணவனும் யாழ்ப்பாணம் இலங்கை வங்கிக் கிளையின் உதவி முகாமையாளருமான த.சந்திரகுமார் கலந்து கொள்ளவுள்ளாhகள்



வரவேற்புரையை கல்லூரி மேற்பார்வையாளர் திருமதி ரதி சந்தரகுமாரும் நினைவுரையை பழைய மாணவியும் முன்னாள் செங்குந்தா இந்துக் கல்’லூரியின் அதிபருமான திருமதி.எல் விசுவலிங்கமும் நிகழத்தவுள்ளாhகள்



கலை நிகழ்வகளாக நடனம் காத்தவராஜன’ கூத்து என்பனவும் இடம் பெறவுள்ளன.