Thursday, January 28, 2010

அதிபர் தேர்தல்: ஓட்டுப் போட முடியாத பொன்சேகா -சொந்த ஊரிலும் தோல்வி


மகிந்த ராஜபக்சேவிடம் தனது சொந்த ஊரிலேயே தோல்வியைத் தழுவியுள்ளார் பொன்சேகா. பொன்சேகாவின் சொந்த ஊர் அம்பலங்கோடா. இங்கு ராஜபக்சே, பொன்சேகாவை விட பெருமளவிலான வாக்குகளைப் பெற்று பொன்சேகாவை தோற்கடித்துள்ளார். இங்கு தபால் ஓட்டுக்கள் மற்றும் வாக்குப் பதிவின்போது பதிவான வாக்குகளில் ராஜபக்சவே அதிகம் பெற்றார். முன்னதாக, நேற்றைய தேர்தலில் பொன்சேகா ஓட்டே போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் அட்டை தனக்கு வழங்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், பொன்சேகா வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர் வெற்றி பெற்றால் அதிபராகப் பதவியேற்பதில் எந்த சிக்கலும் வராது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, பொன்சேகாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிட்டது சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி ராஜக்சே தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடரவுள்ளனராம்

சிவாஜிலிங்கத்தை நிராகரித்து விட்ட தமிழர்கள் - பொன்சேகாவுக்கு பெரும் ஆதரவு


பொன்சேகாவுக்கு தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவும், வாக்குகளும் கிடைத்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொன்சேகாவே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால் சிங்களர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம் தமிழர்களின் வாக்குகளைப் பெருமளவில் பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிவாஜிலிங்கம் எம்.பி மிக மோசமான முறையில் வாக்குகளைப் பெற்றுள்ளார். எங்குமே அவர் 500 ஓட்டுகளுக்கு மேல் வாங்கவே இல்லை. குறிப்பாக தமிழர் பகுதிகளில் பல இடங்களில் 40 ஓட்டு, 50 ஓட்டு என்றுதான் வாங்கியுள்ளார். அவரால் தேர்தலில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. தமிழர்களை அழித்ததில் ராஜபக்சேவை விட பொன்சேகா சற்று நிதானமுடன் செயல்பட்டதாக தமிழர்கள் கருதுவதையே இந்த முடிவுகள் உணர்த்துவதாக உள்ளன. இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் முழு விவரம் இதோ…

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

1. கல்குடா டிவிஷன்

பொன்சேகா - 35,608 (60.45%)
ராஜபக்சே - 20,112 (34.14%)
சிவாஜிலிங்கம் - 176 (0.30%)

2. மட்டக்களப்பு டிவிஷன்

பொன்சேகா - 69,975 (68.74%)
ராஜபக்சே - 28,090 (27.59%)
சிவாஜிலிங்கம் - 254 (0.25%)

3. பாடிருப்பு

பொன்சேகா - 36,776 (80.12%)
ராஜபக்சே - 5,968 (13.00%)
சிவாஜிலிங்கம் - 154 (0.34%)

திகமதுல்லா மாவட்டம்

1. அம்பாறை

ராஜபக்சே - 73,389 (67.94%)
பொன்சேகா - 32,895 (30.45%)
சிவாஜிலிங்கம் - 40 (0.04%)

2. சம்மந்துறை

பொன்சேகா - 27,003 (55.95%)
ராஜபக்சே - 19,991 (41.42%)
சிவாஜிலிங்கம் - 59 (0.12%)

3. கல்முனை

பொன்சேகா - 32,946 (75.76%)
ராஜபக்சே - 9,564 (21.99%)
சிவாஜிலிங்கம் - 45 (0.10%)

4. பொட்டுவில்

பொன்சேகா - 54,374 (59.89%)
ராஜபக்சே - 33,979 (37.42%)
சிவாஜிலிங்கம் - 214 (0.24%)

திரிகோணமலை மாவட்டம்

1. செருவிலா

ராஜபக்சே - 27,932 (63.10%)
பொன்சேகா - 15,260 (34.47%)
சிவாஜிலிங்கம் - 32 (0.07%)

2. திரிகோணமலை

பொன்சேகா - 35,887 (69.42%)
ராஜபக்சே - 13,935 (26.95%)
சிவாஜிலிங்கம் - 193 (0.37%)

3. முத்தூர்

பொன்சேகா - 32,631 (59.09%)
ராஜபக்சே - 21,002 (38.03%)
சிவாஜிலிங்கம் - 52 (0.09%)

வடக்கு மாகாணம்

யாழ்ப்பாணம் மாவட்டம்

1. யாழ்ப்பாணம்

பொன்சேகா - 7,914 (66.17%)
ராஜபக்சே - 3,296 (27.56%)
சிவாஜிலிங்கம் - 126 (1.05%)

2. உடுபிட்டி டிவிஷன்

பொன்சேகா - 8,974 (67.20%)
ராஜபக்சே - 2,545 (19.06%)
சிவாஜிலிங்கம் - 334 (2.50%)

3. காவலூர்

ராஜபக்சே - 4,611 (46.19%)
பொன்சேகா - 3,976 (39.83%)
சிவாஜிலிங்கம் - 284 (2.84%)

4. வட்டுக்கோட்டை

பொன்சேகா - 11,712 (62.68%)
ராஜபக்சே - 4,247 (22.73%)
சிவாஜிலிங்கம் - 500 (2.68%)

5. காங்கேசன்துறை

பொன்சேகா - 8,216 (56.90%)
ராஜபக்சே - 4,559 (31.57%)
சிவாஜிலிங்கம் - 207 (1.43%)

6. மணிப்பாய்

பொன்சேகா - 13,390 (62.01%)
ராஜபக்சே - 5,749 (26.62%)
சிவாஜிலிங்கம் - 231 (1.07%)

7. சாவகச்சேரி

பொன்சேகா - 11,599 (62.39%)
ராஜபக்சே - 4,567 (24.57%)
சிவாஜிலிங்கம் - 348 (1.87%)

8. பருத்தித்துறை

பொன்சேகா - 8,585 (69.30%)
ராஜபக்சே - 2,361 (19.06%)
சிவாஜிலிங்கம் 326 (2.63%)

9. கோப்பாய்

பொன்சேகா - 13,151 (64.13%)
ராஜபக்சே - 4,538 (22.13%)
சிவாஜிலிங்கம் - 306 (1.49%)

10. கிளிநொச்சி

பொன்சேகா - 4,717 (75.11%)
ராஜபக்சே - 991 (15.78%)
சிவாஜிலிங்கம் - 42 (0.67%)

11. நல்லூர்

பொன்சேகா - 11,543 (70.42%)
ராஜபக்சே - 3,554 (21.68%)
சிவாஜிலிங்கம் - 173 (1.06%)

வன்னி மாவட்டம்

1. மன்னார்

பொன்சேகா - 20,157 (70.19%)
ராஜபக்சே - 6,656 (23.18%)
சிவாஜிலிங்கம் - 105 (0.37%)

2. வவுனியா

பொன்சேகா - 31,796 (66.02%)
ராஜபக்சே - 13,742 (28.53%)
சிவாஜிலிங்கம் - 308 (0.64%)

3. முல்லைத்தீவு

பொன்சேகா - 6,882 (73.47%)
ராஜபக்சே - 1,726 (18.43%)
சிவாஜிலிங்கம் - 41 (0.44%)

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

ராஜபக்சே - 4,06,636 (54.16%)
பொன்சேகா - 3,29,492 (43.89%)
சிவாஜிலிங்கம் - 442 (0.06%)

மாத்தள்ளே மாவட்டம்

ராஜபக்சே - 1,57,953 (59.74%)
பொன்சேகா - 1,00,513 (38.01%)
சிவாஜிலிங்கம் - 192 (0.07%)

நுவரேலியா மாவட்டம்

பொன்சேகா - 1,80,604 (52.14%)
ராஜபக்சே - 1,51,604 (43.77%)
சிவாஜிலிங்கம் - 698 (0.20%)

தெற்கு மாகாணம்

காலே மாவட்டம்

ராஜபக்சே 3,86,971 (63.69%)
பொன்சேகா - 2,11,633 (34.83%)
சிவாஜிலிங்கம் - 168 (0.03%)

மாத்தரை மாவட்டம்

ராஜபக்சே - 2,96,155 (65.53%)
பொன்சேகா - 1,48,510 (32.86%)
சிவாஜிலிங்கம் - 154 (0.03%)

ஹம்பந்தோட்டா மாவட்டம்

ராஜபக்சே - 226,887 (67.21%)
பொன்சேகா - 105,336 (31.20%)
சிவாஜிலிங்கம் - 136 (0.04%)

மேற்கு மாகாணம்

கொழும்பு மாவட்டம்

ராஜபக்சே - 6,14,740 (52.93%)
பொன்சேகா - 5,33,022 (45.90%)
சிவாஜிலிங்கம் - 548 (0.05%)

கம்பஹா மாவட்டம்

ராஜபக்சே - 7,18,716 (61.66%)
பொன்சேகா - 4,34,506 (37.28%)
சிவாஜிலிங்கம் - 303 (0.03%)

கலுத்தரா

ராஜபக்சே - 4,12,562 (63.06%)
பொன்சேகா - 2,31,807 (35.43%)
சிவாஜிலிங்கம் - 248 (0.04%)

வட மேற்கு மாகாணம்

குருநெகலா மாவட்டம்

ராஜபக்சே - 5,82,784 (63.08%)
பொன்சேகா - 3,27,594 (35.46%)
சிவாஜிலிங்கம் - 302 (0.03%)

புத்தளம்

ராஜபக்சே - 2,01,981 (58.70%)
பொன்சேகா - 1, 36,233 (39.59%)
சிவாஜிலிங்கம் - 132 (0.04%)

வட மத்திய மாகாணம்

அனுராதபுரம் மாவட்டம்

ராஜபக்சே - 2,98,448 (66.32%)
பொன்சேகா - 1,43,761 (31.94%)
சிவாஜிலிங்கம் - 146 (0.03%)

பொலனருவா மாவட்டம்

ராஜபக்சே - 1,44,889 (64.92%)
பொன்சேகா - 75,026 (33.62%)
சிவாஜலிங்கம் - 54 (0.02%)

உவா மாகாணம்

பைதுல்லா மாவட்டம்

ராஜபக்சே - 237,579 (53.23%)
பொன்சேகா - 198,835 (44.55%)
சிவாஜிலிங்கம் - 450 (0.10%)

முனீர்கலா மாவட்டம் - இன்னும் முடிவு வெளியாகவில்லை

சபரகமுவா மாகாணம்

ரத்னபுரா மாவட்டம்

ராஜபக்சே - 3,77,734 (63.76%)
பொன்சேகா - 2,03,566 (34.36%)
சிவாஜிலிங்கம் - 278 (0.05%)

இடம் பெயர்ந்தோர் வாக்குகள்:

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் இடம் பெயர்ந்த தமிழர்களில் மொத்தம் 63 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இவர்களில் 61 பேர் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும், ராஜபக்சேவுக்கு ஆதரவாக 2 பேரும் வாக்களித்தனர்.
சிவாஜிலிங்கத்திற்கு ஒருவர் கூட ஓட்டுப் போடவில்லை.

வன்னி

வன்னியில் மொத்தம் 15,394 இடம் பெயர்ந்தோர் வாக்களித்துள்ளனர்.

இவர்களில் பொன்சேகாவுக்காக 9,687 பேரும், ராஜபக்சேவுக்கு ஆதரவாக 4,598 பேரும் வாக்களித்துள்ளனர்.

சிவாஜிலிங்கத்திற்குக் கிடைத்த ஓட்டுக்கள் 55 மட்டுமே.

ராஜபக்ஷ வெற்றி: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா, இந்த முடிவுகளை தான் ஏற்கவில்லை என்றும் அவற்றை தான் எதிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். பதிவான வாக்குகளில் 58 சதவீதமானவை ராஜபக்ஷவுக்கு விழுந்திருப்பதாக அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை சரியானது அல்ல, இந்த முடிவுகள் ரத்துசெய்யப்படும் நோக்கில் சட்ட நடவடிக்கைகளைத் தான் தொடுக்கவிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தான் எழுதிய கடிதத்தில் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளளார். தமிழர்கள் உள்பட சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா முன்னிலை பெற்றிருக்கிறார். தென் இலங்கையில் அவரது சொந்தத் தொகுதியான அம்பலாங்ககொடவில் மஹிந்த ராஜபக்ஷ அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை ராஜபக்ஷ பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆரம்பகட்ட தேர்தல் முடிவு நிலவரங்களைப் பார்க்கும்போது, எதிர்க்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் ஃபொன்சேகா, சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது என கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் சார்லஸ் ஹவிலண்ட் கூறுகிறார்.

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் பொன்சேகா


தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். “இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது.” என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார். நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.

விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களில் 31ஆயிரம்பேர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதற்கு வவுனியா அரசஅதிபர் மறுப்பு

சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 31 ஆயிரம் பேர் தலைமறைவாகியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்த குற்றச்சாட்டை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ளஸ் முழுமையாக நிராகரித்துள்ளார். உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்றுவரும் அனுமதியைப் பயன்படுத்தி நாளாந்தம் 25ஆயிரம்பேர் நலன்புரி முகாம்களுக்கு வெளியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்களே மெனிக்பாமில் உள்ளனர். இவர்களில் 25ஆயிரம் பேர் மாறி மாறி விசேட அனுமதியுடன் வெளியில்சென்று வருகின்றனர். வெளியில்செல்லும் அனைவரும் திரும்பி வருகின்றனரென்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி


இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றார். 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் சரத் பொன்சேகாவை தோற்கடித்தார். இதன்மூலம் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ராஜபக்சே. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப் பதிவு முடிந்த பின்னர் இரவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் ஆரம்பத்திலிருந்தே ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். தமிழர் பகுதிகளில் பொன்சேகாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தாலும் அவர் ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பின் தங்கியிருந்தார். இறுதியில் 18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான ரூபவாகினி அறிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வாக்கு வித்தியாசத்திலும் ராஜபக்சே வென்றுள்ளார். பொன்சேகா வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தோல்வியுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வட கிழக்கில் பொன்சேகாவுக்கு கூடுதலான வாக்குகளும், தெற்கில் ராஜபக்சேவுக்கு கூடுதலாகவும் வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த 2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே 50.29 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கே 48.43 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இம்முறை சுமார் 70சதவீத வாக்குகளை ராஜபக்சே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சே பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கும் தகவல் பரவியதும் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இரவிலேயே பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். விடிய விடிய அவர்கள் தூங்காமல் தெருக்களிலும், சாலைகளிலும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியபடி இருந்தனர்.

பொன்சேகா சுற்றிவளைப்பு-கொல்ல ராஜபக்சே சதி என்கிறார்

என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் தோல்விமுகத்தில் இருக்கும் பொன்சேகா கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது பாதுகாவலர்களுடன் தங்கியுள்ளார். இந் நிலையில் இந்த ஹோட்டலை ராணுவத்தினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர். தேர்தல் தோல்வியால் பொன்சேகா தப்பிப் போய் விடாமல் தடுப்பதற்காகவும், முடிவு வெளியானவுடன் அவரைக் கைது செய்யும் திட்டத்துடனும் ராணுவத்தை ராஜபக்சே குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந் நிலையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பொன்சேகா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெருமளவில் முறைகேடுகளைச் செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானவுடன் என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தான் எனது ஹோட்டலைச் சுற்றி ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இங்கு தங்கியிருப்போரையும், அருகில் உள்ள பொதுமக்களையும் வெளியேறுமாறும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர். எனது உயிருக்கு ராஜபக்சேவால் தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பாதுகாப்பு அளிக்கவே ராணுவம்-அரசு: இந் நிலையில் பொன்சேகாவின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது. பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அளிக்கவே அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியிலுள்ள இந்தியத் தூதுரகத்துக்கு புலிகளின் பெயரில் வெடிபொருள் பார்சல் அனுப்பி வைப்பு


இத்தாலி ரோம்நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திற்கு புலிகளின் பெயரில் ஐஇடி எனப்படும் வெடிபொருள் தபால்மூலம் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பார்சல் ஜனவரி 20ம் திகதி தூதரகத்திற்கு வந்ததாகவும், அதன் அனுப்புநர் பெயரில் இத்தாலி, புலிகள் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் இத்தாலிக்கான இந்தியத்தூதுவர் ஆரிப் கான் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான தபால் பொதி கிடைக்கப்பெற்றதும் தூதரக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக பொலீசாரை வரவழைத்து சோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தூதரகத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது

சரத் பொன்சேகாவின் மருமகனை 27ம்திகதிக்கு பின் விசாரிப்போம்.. -சி.ஐ.டி.பணிப்பாளர்

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தனியார் தொலைக்காட்சியொன்றில் வழங்கியுள்ள பேட்டியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியதாக தெரிவித்திருக்கும் கருத்தினை அதன் பணிப்பாளர் எம்.கே.டி. விஜய அமரசிங்க நேற்று மறுத்துள்ளார். கட்சி, மத, சமய பேதமின்றி சி.ஐ.டி. பிரிவு செயற்பட்டு வருகிறது. அரசியல் இலாபத்துக்காக சிலர் சி.ஐ.டி.யினர் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கும் கருத்துகளால் பொதுமக்களிடையே நம்பகத்தன்மை குறைய இடமுண்டு. இருப்பினும், பொன்சேகா கூறியிருக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமிருக்க வாய்ப்பில்லையெனவும் சி.ஐ.டி.பணிப்பாளர் விஜய சமரசிங்க நேற்று தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகமத்திய நிலையத்தில் நேற்றுமாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பணிப்பாளர் விஜய அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்;, சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய கொழும்பு மற்றும் அமெரிக்காவில் அமையப் பெற்றிருக்கும் ஹை கோர்ப் நிறுவனம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய, 109வது சட்டமூலத்தின் 06வது உபபிரிவின்படி விசாரணைகளுக்கான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக வேட்பாளர் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரட்ணவை விசாரணைகளுக்காக சி.ஐ.டி.க்கு வருகைதருமாறு கடிதம் ஒன்றை கடந்த 19ம் திகதி அனுப்பிவைத்தோம். அதில் 20ம் திகதிகாலை சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், 20ம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் வேலைப்பளு காரணமாக விசாரணையை மறுஅறிவித்தல் வரை ஒத்திவைத்திருப்பதாக குறிப்பிட்டு எனது கையொப்பத்துடன், தபாலை பொலிஸ் அதிகாரியொருவரூடாக தனுன திலக்கரட்ணவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். நான் அதனை 10மணிக்கு அனுப்பி வைத்த அதேநாள் 11.45 மணியளவில் தனுன திலக்கரட்ணவிடமிருந்து எனக்கொரு தொலைநகல் கிடைத்தது. அதில் அவர், தனது மாமாவுடன் தேர்தல் வேலையில் ஈடுபட்டிருப்பதனால் 26ம் திகதிக்கு பின்னரே விசாரணைக்காக சமூகமளிக்க முடியுமெனக் குறிப்பிட்டிருந்தார். தேர்தலைப் பொறுத்தவரை இது முக்கிய விசாரணையாக மதிக்கப்பட்ட போதிலும் சி.ஐ.டி.யைப் பொறுத்தவரை இது அவ்வளவு முக்கியமானதல்ல. எனவே, எதிர்வரும் 26ம் திகதிக்குப் பின்னர் இது குறித்து தினம் ஒன்றை ஒதுக்கவோமென நான் எனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன். அதற்கிடையில், சி.ஐ.டி.யைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் விசாரணைக்காக பொன்சேகாவின் மருமகனை இங்கே வரவழைப்பதனை விட எனது சீருடையை களைந்துவிட்டு வீடு செல்லலாம் என கூறியதாக பொன்சேகா செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சி.ஐ.டி. பணிப்பாளராக பதவியேற்ற இரண்டுமாதக் காலப்பகுதிக்குள் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பாகவும் நன்கு அறிந்து வைத்துள்ளேன். அதேவேளை, நாம் கட்சி பேதமின்றி செயற்படும் ஒரு நிறுவனம் என்பதனையும் பொதுமக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடத் தயாராக வைக்கப்பட்டிருந்த 20முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் கைது

தேர்தல் தினமான இன்று வன்முறைகளில் ஈடுபடுவதற்கென தயாராகவிருந்த 20 முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி, கொக்கரெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கையும்மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலின்போது வன்முறைகளை முன்னெடுப்பதற்காக பாரிய திட்டங்களை இவர்கள் தீட்டிவருவதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பிலிருந்து சென்ற விசேட இராணுவக்குழுவினரே மேற்படி 20முன்னாள் கொமாண்டோக்களை ஆயுதங்களுடன் கைதுசெய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 20பேரும் இராணுவ பொலிஸார் மற்றும் சி.ஐ.டி.யினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவர்கள் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவினரென தெரிய வந்த போதும், இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தரங்களைச் சேர்ந்தவர்களென்ற விவரம் பூரண விசாரணகளுக்குப் பின்னரே தெரியவருமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட முடியும் -தேர்தல் திணைக்களம்

ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்றுகாலை 7மணிக்கு ஆரம்பமாகி 4மணிக்கு முடிவடைவதை அடுத்து வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை, நாடுமுழுவதும் வாக்குகளை எண்ணுவதற்கென 888 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்கென 737நிலையங்களும், தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்கென 139நிலையங்களும், இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்கென 12 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களைச் சென்றடைந்தவுடன் இன்றுஇரவு 7 மணியளவில் வாக்குகள் எண்ணும்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிடமுடியும் என்று தேர்தல் திணைக்கள உயரதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, அவசரத் தேவைகளுக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதற்கும் தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தயாராக வைக்கப்பட்டிருந்த 20முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் கைது

தேர்தல் தினமான இன்று வன்முறைகளில் ஈடுபடுவதற்கென தயாராகவிருந்த 20 முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி, கொக்கரெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கையும்மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலின்போது வன்முறைகளை முன்னெடுப்பதற்காக பாரிய திட்டங்களை இவர்கள் தீட்டிவருவதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பிலிருந்து சென்ற விசேட இராணுவக்குழுவினரே மேற்படி 20முன்னாள் கொமாண்டோக்களை ஆயுதங்களுடன் கைதுசெய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 20பேரும் இராணுவ பொலிஸார் மற்றும் சி.ஐ.டி.யினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவர்கள் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவினரென தெரிய வந்த போதும், இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தரங்களைச் சேர்ந்தவர்களென்ற விவரம் பூரண விசாரணகளுக்குப் பின்னரே தெரியவருமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.