கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லாரியின் அதிபர் அ.அகிலதாஸ் தலைமையில் பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் முதல் நாள் நிகழ்வகள் இடம் பெறவுள்ளன.
காலை அமர்வுகள் செல்லையா அரங்கில் இடம் பெறவுள்ளது இந் நிகழ்வுpல் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பண்பாட்டு ஆலுவலகள் மற்றும் விளையாட்டுத்துறையின் செயலாளர் எல. இளங்கோவும் சிறப்பு விருந்தினாகளாகயாழ்ப்பாணம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில்நந்தனன்கொக்குவில் இந்துக் கல்லூரி முன்னாள் பிரதி அதிபர் திருமதி சுகிர்த லட்சுமி சுப்பிரமணியமும் கலந்து கொள்ளவுள்ளாhகள்.
ஆசியுரையை நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகஞானசம்பந்த பரமாச்சாரியசுவாமிகளும் வரவேற்புரையைகொக்குவில் இந்துக் கல்லூரி பிரதி அதிபர் க.வேலாயுதமும் வழங்கவுள்ளாhகள்
நினைவுரையை திருமதி சுகிர்தலட்சுமி சுப்பிரமணியம் நிகழ்த்தவுள்ளார்.
பிரதமஅதிதி உரையைத் தொடாந்து நூற்றாண்டு மலரினை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக முகாமைத்துவ வணிகபீடாதிபதி க.தேவராசா வெளியிட்டு வைக்க முதற்பிரதியை சமூகப் புரவலர் மாணிக்கம் சுப்பிரமணியம் பெற்றுக் கொள்வார்
நூற்றாண்டு மலர் மதிப்புரையை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக சரேஸ்ட விரிவுரையாளர் திருநாவுக்கரசு வேல்நம்பி நிகழ்த்தவுள்ளார்.
மாலை நிகழ்வகள் பிற்பகல் 5.00 மணிக்கு கார்த்திகேசு அரங்கில் கல்லூரியின் மன்னாள் பிரதி அதிபர் திருமதி சுகிர்தலட்சுமி சுப்பிரமணியம் தலைமையில் இடம் பெறவுள்ளது இந் நிகழ்வுpல் பிரதம அதிதியாக பிரபல வர்த்தகரும் பழைய மாணவனுமான க.வை சற்குணமும் சிறப்பு அதிதிகளாக கனடா பழைய மாணவர் சங்கப் பொருளாளர் எஸ்.குகனேந்திரன் கொழும்பு பழைய மாணவர் சங்க செயலாளரும் முன்னாள் பிரதி அதிபருமான ப.ஜெகநாதன்முன்னாள் ஆசிரியர் சூ.பாலயோகன்பழைய மாணவனும் யாழ்ப்பாணம் இலங்கை வங்கிக் கிளையின் உதவி முகாமையாளருமான த.சந்திரகுமார் கலந்து கொள்ளவுள்ளாhகள்
வரவேற்புரையை கல்லூரி மேற்பார்வையாளர் திருமதி ரதி சந்தரகுமாரும் நினைவுரையை பழைய மாணவியும் முன்னாள் செங்குந்தா இந்துக் கல்’லூரியின் அதிபருமான திருமதி.எல் விசுவலிங்கமும் நிகழத்தவுள்ளாhகள்
கலை நிகழ்வகளாக நடனம் காத்தவராஜன’ கூத்து என்பனவும் இடம் பெறவுள்ளன.
Friday, July 16, 2010
Monday, February 15, 2010
வடக்கு கிழக்கில் அமைந்துள்ள முப்பது முன்னைய புகையிரத நிலையங்களின் புகைப்படத்தொகுப்பு
வடக்கு கிழக்கின் ரயில்வே பாதைகளின் திருத்த வேலைகளைப் போக்குவரத்து அமைச்சு தற்போது முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பாரிய நிதி உதவியை வெளிநாடுகளிடமிருந்து கிடைத்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஏற்கனவே வடக்கு கிழக்கு ரயில் பாதைகளைத் திருத்தி அமைக்கும் பணிக்கு இந்தியா மேலதிக உதவிகளை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அரசாங்கம் 'கிழக்கின் உதயம்', 'வடக்கின் வசந்தம்' ஆகிய திட்டங்களினூடாக, போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுண்ணாகம் புகையிரத நிலையம்
யாழ் புகையிரத நிலையம்
ஆனையிறவு புகையிரத நிலையம்
எழுதுமட்டுவாள் புகையிரத நிலையம்
யாழ் புகையிரத நிலைய நுழைவாயில்
இணுவில் புகையிரத நிலையம்
காங்கேசன்துறை புகையிரத நிலையம்
கிளிநொச்சி புகையிரத நிலையம்
கொடிகாமம் புகையிரத நிலையம்
கொக்குவில் புகையிரத நிலையம்
கோண்டாவில் புகையிரத நிலையம்
சாவகச்சேரி புகையிரத நிலையம்
மாங்குளம் புகையிரத நிலையம்
மாவிட்டபுரம் புகையிரத நிலையம்
மீசாலை புகையிரத நிலையம்
மிருசுவில் புகையிரத நிலையம்
முறுகண்டி ஆலயவீதி புகையிரத நிலையம்
முறுகண்டி புகையிரத நிலையம்
நாவற்குழி பாலம்
நாவற்குழி புகையிரத நிலையம்
ஓமந்தை புகையிரத நிலையம்
ஓமந்தை புகையிரத நிலையம்
One-of-the-railway-bridge
பலாலி புகையிரத நிலையம்
புளியங்குளம் புகையிரத நிலையம்
யாழ் புகையிரத நிலைய பயணிகள் விடுதி
சங்கத்தானை உதவி புகையிரத நிலையம்
தச்சந்தோப்பு புகையிரத நிலையம்
Turn-table-at-Kankesanthurai
தெல்லிப்பளை புகையிரத நிலையம்
சரத் பொன்சேகாவின் ஆதரவாளரான, கால்களை இழந்த படைவீரர் மீது தாக்குதல்

இந்த தாக்குதலுக்கு முன்னர் அவர், கடத்திச் செல்லப்பட்டதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கொழும்பின் புறநகர் ராகமையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போயிருந்த அவர் பின்னர் பலமாக தாக்கப்பட்ட நிலையில், வீதியோரத்தில் கிடத்தப்பட்டிருந்தார்.
இந்த்ப் படைவீரர் 1997ஆண்டின் பிற்பகுதியில் வெற்றி நிச்சயம் ( ஜெயசிக்குறு) படை நடவடிக்கையின் போது காயமடைந்தார்.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரின் ஆதரவாளர்கள் நாடளாவிய ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
15 மணித்தியாலங்களில் சஜீவனின் அன்பளிப்பு (£16,958.92) கிடைக்கப்பெற்றுள்ளது

சஜீவனுக்கு லங்காசிறி இணையத்தினர் உறுதி கூறியதன் பிரகாரம், புலம்பெயர் தமிழ் மக்களிடம் அவரது நிலைவரத்தை விளக்கி தமிழ்வின் இணையம் ஊடாக உதவ முடியுமா என கேட்டிருந்தனர்.
அதன்படி அவருடைய இரு கைகளின் சத்திரசிகிக்சைக்கான மொத்த நிதி இந்திய ரூபா 12 இலட்சம் தேவைப்படும் என கேட்டிருந்த நிலையில், அவர் கேட்டிருந்த மொத்த நிதித்தொகை 15 மணித்தியாலங்களில் பெரும் ஈகைஉள்ளம் கொண்ட புலம்பெயர் தமிழ் மக்களால் உதவப்பட்டுள்ளது.
லங்காசிறி மற்றும் தமிழ்வின் இணையத்தளங்கள் இணைந்து இந்த மகத்தான சேவையை செய்திருந்தது. ஏராளமான மக்கள் மனமுவந்து பணவுதவிகளை செய்திருந்தனர். இந்தநேரத்தில் சஜீவன் சார்பில் நாம் உதவிக்கரம் நீட்டிய பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச் சிறுவனுக்கு மருத்துவசிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்ய இருக்கின்றோம்.
மற்றும் திரட்டப்பட்ட நிதி விபரங்கள், எவ்வாறு அப்பணம் அங்கு சஜீவனிடத்தில் ஒப்படைக்கபடுகிறது போன்ற விபரங்களை இன்னும் ஒரு சில நாட்களில் எமது இணையத்தளத்தினூடாக தங்களுக்கு அறியத்தருவோம்.
மேலும், நாம் எமது இணையத்தளத்தில் பணம் செலுத்திய அனைவருடைய விபரங்கள் பட்டியலாக இணைத்துள்ளோம். விபரப் பட்டியலில் ஏதாவது தவறு இருப்பின் எமது தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளவும். (தொலைபேசி எண்: 0041796357420)
பணம் செலுத்தியவர்களின் விபரம்
மேலும் சேர்க்கப்பட்ட பணத்தின் தொகை கீழே விபரமாக தந்துள்ளோம்
இலங்கை மாணவருக்கான பிரிட்டன் விசாவுக்கான புதிய நடைமுறை மார்ச் முதல் அமுல்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இப்புதிய நடைமுறைகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வருகின்ற போதிலும் ஏற்கனவே விசாவைப் பெற்றுள்ள இலங்கை மாணவர்களைப் பாதிக்காது.
மாணவர்களின் கல்வித் திட்டங்களின் அளவே அவர்கள் வேலை செய்யும் நேரத்தைக் கட்டுப்படுத்தவுள்ளது. இதன்படி 6 மாதங்களுக்கு குறைந்த கால கல்வியை கற்கும் மாணவர்களுக்குத் தொழில்புரியும் அனுமதி மறுக்கப்படும்.அத்துடன்,பட்டப்படிப்பு அல்லது அடிப்படை மட்டக்கல்வியை பயிலாதவர்களுக்கும் அவர்களுக்குரிய தகுதியை அடையாதவரை பிரிட்டனில் வேலை செய்வதற்கான அனுமதி மறுக்கப்படும்.
மாணவர்கள் பொறுப்பேற்றல் மற்றும் பல்கலைக்கழக அனுமதியூடாக சர்வதேச மாணவர்களை அழைக்கும்போது புதிய நடைமுறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
உயர் நம்பிக்கை அனுசரணை (ஸ்பொன்சர்) திட்டமொன்றை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதுடன், அத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த உயர் நம்பிக்கை அனுசரணை (ஸ்பொன்சர்) மூலம் தேசிய தரம் வாய்ந்த கற்கை நெறி வழங்கப்படுவதுடன், பட்டப்படிப்பிற்கு குறைந்த தரத்திற்கு வேலையிடங்களும் வழங்கப்படும்.
புதிய நடைமுறையின்படி ஆங்கில மொழி தரத்தை உயர்த்தவும், ஆங்கில மொழி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுசரணை (ஸ்பொன்சர்) வழங்கவும், பட்டப்படிப்பை முழுநேரம் மேற்கொள்பவர்களின் தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவற்றுக்கான தற்போதைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாணவர்களை ஊக்குவிக்கவும் பொருளாதார குடிவரவினைத் துரிதப்படுத்தவும் திட்டங்கள் பிரிட்டன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த மாற்றங்கள் விசா வழங்க முன்னர் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக கல்லூரிகள் அனுமதி வழங்குதல் குறித்து கடந்த மார்ச்சில் ஆரம்பித்த மாணவர் முறைமையினைப் பரிசோதிக்கும் அடிப்படையிலானவை.
எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜெனரல் கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்கா கேள்வி?

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அழைத்து சரத் பொன்சேகா கைது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
கைது தொடர்பில் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் பிலிப் ஜே. க்ரம்லி, ஜாலிய விக்ரமசூரியவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையின் சட்ட விதிகளுக்கு அமைவாகவே ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
எந்த சட்டத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் விளக்கப்பட வேண்டுமென க்ரம்லி தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
இது உள்நாட்டு விவகாரம் என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் தனிப்பட்டவர்களின் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதனை தெரிவிக்கவேண்டும்.
அடுத்த விடயம் யாதெனில் யாரும் கோரிக்கைகளை விடுக்கலாம். பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் கோரிக்கைகள் விடுக்கப்படலாம். ஆனால் எமது கைகளிலேயே விடயங்கள் உள்ளன. இது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்பதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
யுத்தம் முடிந்தவுடன் இலங்கையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அவற்றுக்கு பதிலளித்தோம். அவை அந்த சந்தர்ப்பங்களில் முடிவுக்கு வந்தன.
மேலும் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற இலங்கை விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அமோக வெற்றியீட்டியதையும் நினைவூட்டுகின்றோம்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது தற்போது மீண்டும் போர்க் குற்றங்கள் மற்றும் சுயாதீன விசாரணைகள் என்று கோரிக்கை விடுக்கப்படும்போது அவற்றுக்குப் பதிலளிக்க முடியாது என்றார் யாப்பா.
Subscribe to:
Posts (Atom)