
சஜீவனுக்கு லங்காசிறி இணையத்தினர் உறுதி கூறியதன் பிரகாரம், புலம்பெயர் தமிழ் மக்களிடம் அவரது நிலைவரத்தை விளக்கி தமிழ்வின் இணையம் ஊடாக உதவ முடியுமா என கேட்டிருந்தனர்.
அதன்படி அவருடைய இரு கைகளின் சத்திரசிகிக்சைக்கான மொத்த நிதி இந்திய ரூபா 12 இலட்சம் தேவைப்படும் என கேட்டிருந்த நிலையில், அவர் கேட்டிருந்த மொத்த நிதித்தொகை 15 மணித்தியாலங்களில் பெரும் ஈகைஉள்ளம் கொண்ட புலம்பெயர் தமிழ் மக்களால் உதவப்பட்டுள்ளது.
லங்காசிறி மற்றும் தமிழ்வின் இணையத்தளங்கள் இணைந்து இந்த மகத்தான சேவையை செய்திருந்தது. ஏராளமான மக்கள் மனமுவந்து பணவுதவிகளை செய்திருந்தனர். இந்தநேரத்தில் சஜீவன் சார்பில் நாம் உதவிக்கரம் நீட்டிய பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச் சிறுவனுக்கு மருத்துவசிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்ய இருக்கின்றோம்.
மற்றும் திரட்டப்பட்ட நிதி விபரங்கள், எவ்வாறு அப்பணம் அங்கு சஜீவனிடத்தில் ஒப்படைக்கபடுகிறது போன்ற விபரங்களை இன்னும் ஒரு சில நாட்களில் எமது இணையத்தளத்தினூடாக தங்களுக்கு அறியத்தருவோம்.
மேலும், நாம் எமது இணையத்தளத்தில் பணம் செலுத்திய அனைவருடைய விபரங்கள் பட்டியலாக இணைத்துள்ளோம். விபரப் பட்டியலில் ஏதாவது தவறு இருப்பின் எமது தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளவும். (தொலைபேசி எண்: 0041796357420)
பணம் செலுத்தியவர்களின் விபரம்
மேலும் சேர்க்கப்பட்ட பணத்தின் தொகை கீழே விபரமாக தந்துள்ளோம்
No comments:
Post a Comment