Thursday, January 28, 2010

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட முடியும் -தேர்தல் திணைக்களம்

ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்றுகாலை 7மணிக்கு ஆரம்பமாகி 4மணிக்கு முடிவடைவதை அடுத்து வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை, நாடுமுழுவதும் வாக்குகளை எண்ணுவதற்கென 888 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்கென 737நிலையங்களும், தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்கென 139நிலையங்களும், இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்கென 12 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களைச் சென்றடைந்தவுடன் இன்றுஇரவு 7 மணியளவில் வாக்குகள் எண்ணும்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிடமுடியும் என்று தேர்தல் திணைக்கள உயரதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, அவசரத் தேவைகளுக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதற்கும் தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment