Thursday, January 28, 2010

அதிபர் தேர்தல்: ஓட்டுப் போட முடியாத பொன்சேகா -சொந்த ஊரிலும் தோல்வி


மகிந்த ராஜபக்சேவிடம் தனது சொந்த ஊரிலேயே தோல்வியைத் தழுவியுள்ளார் பொன்சேகா. பொன்சேகாவின் சொந்த ஊர் அம்பலங்கோடா. இங்கு ராஜபக்சே, பொன்சேகாவை விட பெருமளவிலான வாக்குகளைப் பெற்று பொன்சேகாவை தோற்கடித்துள்ளார். இங்கு தபால் ஓட்டுக்கள் மற்றும் வாக்குப் பதிவின்போது பதிவான வாக்குகளில் ராஜபக்சவே அதிகம் பெற்றார். முன்னதாக, நேற்றைய தேர்தலில் பொன்சேகா ஓட்டே போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் அட்டை தனக்கு வழங்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், பொன்சேகா வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர் வெற்றி பெற்றால் அதிபராகப் பதவியேற்பதில் எந்த சிக்கலும் வராது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, பொன்சேகாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிட்டது சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி ராஜக்சே தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடரவுள்ளனராம்

No comments:

Post a Comment